×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

IPL FINAL 2023 : மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம்..!!

IPL FINAL 2023 : மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம்..!!

Advertisement

ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டியில் மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், லீக் சுற்று மற்றும் ப்ளே-ஆப் சுற்று போட்டிகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளன. புள்ளிகளின் அடிப்படையில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய ப்ளே-ஆப் சுற்றின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் பின்னர் நடைபெற்ற எலிமினேட்டர் என்கிற வெளியேற்றுதல் சுற்றில் லக்னோ அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடிய மும்பை அணி 2 வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

நேற்று முன்தினம் நடைபெற்ற 2 வது தகுதி சுற்று போட்டியில் மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், குஜராத் அணி தொடர்ந்து 2 வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அறிமுகமான முதல் 2 தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை அந்த அணி பெற்றது.

இந்த நிலையில், 16 வது ஐ.பி.எல் தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியதில் குஜராத் 3, சென்னை 1 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

தொடர்ந்து 2 வது முறையாக கோப்பையை வெல்ல நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், 5 வது முறையாக கோப்பையை வென்று சாதனை பட்டியலில் இணைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. பேட்டிங்கிற்கு உகந்த ஆடுகளமான ஆமதாபாத் மைதானத்தில் இரு அணிகளுமே ரன் வேட்டை நடத்தும் என்பதால் ரசிகர்களுக்கு தரமான விருந்து காத்திருக்கிறது.

இன்றைய போட்டியில் பங்கேற்கும் இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் பின்வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, ஷிவம் துபே, அஜின்கியா ரஹானே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (கீப்பர் & கேப்டன்), தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா.

குஜராத் டைட்டன்ஸ் : விருத்திமான் சஹா (கீப்பர்), சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ரஷித் கான், ராகுல் திவேதியா, நூர் அகமது, முகமது ஷமி, மொஹித் சர்மா.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#CSK vs GT #IPL 2023 #TATA IPL #IPL Finals #Mega Finals
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story