×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மொத்த ஐபில் டீமும் மாறப்போகுது!! தற்போது தக்க வைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல் இதோ..

மொத்த ஐபில் டீமும் மாறப்போகுது!! தற்போது தக்க வைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல் இதோ..

Advertisement

ஐபில் அணிகள் தாங்கள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்துமுடிந்த ஐபில் தொடரில் தோனி  தலைமையிலான சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் அனைத்து அணிகளும் அடுத்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகளுக்கு தயாராகிவருகிறது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபில் போட்டியில் லக்னோ, அகமதாபாத் என இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போதுள்ள அணிகளின் வீரர்கள் கலைக்கப்பட்டு விரைவில் மெஹா ஏலம் நடைபெற உள்ளது. அதேநேரம் தற்போது உள்ள அணிகள் தங்கள் அணியில் இருக்கும் ஏதாவது நான்கு வீரரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம்.

அந்தவகையில் அணிகள் தாங்கள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

1. சென்னை சூப்பர் கிங்ஸ்:
1. எம்.எஸ் தோனி
2. ரவீந்திர ஜடேஜா
3. ருதுராஜ் கைக்வாட்
4. மொய்ன் அலி

2. மும்பை இந்தியன்ஸ்:
1. ரோஹித் சர்மா
2. ஜஸ்பிரித் பும்ரா

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
1. விராட் கோலி
2. கிளென் மேக்ஸ்வெல்

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
1. சுனில் நரேன்
2. ஆண்ட்ரே ரசல்
3. வருண் சக்ரவர்த்தி
4. வெங்கடேஷ் ஐயர்

5. சன் ரைசர்ஸ் ஹைதெராபாத்:
1. கேன் வில்லியம்சன்

6. ராஜஸ்தான் ராயல்ஸ்:
1. சஞ்சு சாம்சன்

7. டெல்லி கேபிட்டல்ஸ்:
1. ரிஷப் பண்ட்
2. பிரிதிவி ஷா
3. அக்சர் படேல்
4. அன்றிச் நோர்ட்ஜெ

மற்ற அணிகள் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை தயாரித்து வருகின்றனர், இன்று இரவு 12 மணியுடன் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் அணி நிர்வாகம் வழங்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2021 #IPL 2022
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story