IPL2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார்களா அந்த முன்னனி 3 வீரர்கள்?
Ipl 2020 players of chennai super kings

IPL 2020 தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்த மாதம் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்திற்காக அனுப்பியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளாக பெரிதாக எந்தவித மாற்றமும் நிகழவில்லை. ஆனால் அடுத்த ஐபிஎல் தொடருக்கான அணியில் புதிதாக வீரர்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
இதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 3 வீரர்கள் பியூஸ் சாவ்லா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், சாம் குர்ரான் ஆவர்.
பியூஸ் சாவ்லா:
கொல்கத்தா அணிக்காக ஆடிய பியூஸ் சாவ்லா தற்போது ஏலத்திற்கு வந்துள்ளார். சென்னை மைதானம் லெக் ஸிபின்னருக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இவரை சென்னை அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது.
மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்:
ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டரான இவர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஆல் ரவுண்டரான இவரை வாட்சனுடன் துவக்க ஆட்டக்காரராகவும் இறக்கலாம், இல்லை கடைசியிலும் பயன்படுத்தலாம் என்பதால் இவரை சென்னை அணியில் எடுக்க வாய்ப்புள்ளது.
சாம் குர்ரான்:
இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவரை பஞ்சாப் அணி வெளியேற்றியுள்ளது. இவரும் சில சமயங்களில் அதிரடியாக பேட்டிங் செய்வார் என்பதால் தோனிக்கு இவரை அணியில் சேர்க்கும் எண்ணம் இருக்கும். எனவே சென்னை அணியில் சேர்க்க இவருக்கும் வாய்ப்பு உள்ளது.