ஐபில் அணிகளின் லேட்டஸ்ட் புள்ளி பட்டியல்! எந்த அணி எந்த இடம்? இதோ!
IPL 2019 latest points table up to 39th match

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 39 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை நடந்த 10 பொறிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி ஏறக்குறைய அடுத்த சுற்றுகுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் முதல் இடத்திலும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி இரண்டாம் இடத்திலும் உள்ளது.
ஆரம்பத்தில் சற்று தடுமாறிய டெல்லி அணி தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திலும் கைதராபாத் அணி நான்காம் இடத்திலும் உள்ளது. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் தொடர் தோல்விகளால் ஐந்து மற்றும் ஆறாம் இடத்தில் உள்ளது.
ஒன்பது போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள ராஜஸ்தான் அணி 7 வது இடத்திலும், 10 போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டும் வெற்றிபெற்றுள்ள பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடமான 8 வது இடத்திலும் உள்ளது.
புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் டெல்லி, கைதராபாத், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.