×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணி படைத்துள்ள விசித்திர சாதனை; என்ன தெரியுமா?

ipl 2019 - sunrishes hydrabad - differend record

Advertisement

இதுவரை விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் 12வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. மும்பை, சென்னை, டெல்லி  அணிகள் எளிமையாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. நான்காவது அணியாக முன்னேறுவது யார் என்று பல பரிட்சை நடந்த நிலையில் ஒரு வழியாக ஹைதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது.

நடந்து முடிந்த 54 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் எளிமையான வாய்ப்பினை ஹைதராபாத் அணி தவறவிட்டது.



 

இதனால் நேற்று நடைபெற்ற மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் சுவாரசியமாக மாறியது. இப்போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் மும்பை அணி இடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் ஹைதராபாத் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இதனால் ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே வெறும் 12 புள்ளிகள் பெற்று ‘ப்ளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற விசித்திர சாதனை படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 #srh #new record #hydrabad
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story