ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் விளையாடும் 12 ஆம் வகுப்பு மாணவர்; யார் தெரியுமா?
ipl 2019 - royal challenges - brayas rai barman- youngest boy
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 11 சீசன் நிறைவுற்ற ஐபிஎல் தொடரின் 12 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது. இதனால் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள பிரேயஸ் ராய் பர்மன் என்ற வீரர் தற்போது சிபிஎஸ்சி கல்வி முறையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இதனால் மிகவும் குறைந்த வயதில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் 2018 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபூர் ரகுமான் தான் மிகவும் குறைந்த வயதில் பங்கேற்றவர் என்ற சிறப்பினைப் பெற்றிருந்தார்.
பிரேயஸ் ராய் பர்மன்(16 ஆண்டுகள் 157 நாள்கள்)
முஜிபூர் ரகுமான்(17 ஆண்டுகள் 11 நாள்கள்)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு அணி விளையாடிய 11வது லீக் போட்டியில் பந்து வீசிய பிரேயஸ் ராய் பர்மன் 4 ஓவர்களுக்கு 56 ரன்கள் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.