×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

8 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்த டெல்லியின் பரிதாபம்; ஹாட்ரிக் படைத்த ஷாம் கரனால் பஞ்சாப் அசத்தல் வெற்றி.!

ipl 2019 - KXIP vs DC - 8 runs 7 wickets - sam curren hatrick

Advertisement

ஐபிஎல் சீசன் 12 நடைபெற்று வருகிறது. இதற்கு முந்தைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல் சூப்பர் ஓவரில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடைபெற்ற 13 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது டெல்லி கேப்பிடல்.

மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வின் செய்த டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி பஞ்சாப் அணிக்காக களம் இறங்கிய அந்த அணியின் வீரர்கள் அதிகபட்சமாக சர்ப்ராஸ் கான் 39 , டேவிட் மில்லர் 43 மந்தீப்  சிங் 29 எடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ப்ரீத்தி ஷா டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. ஒருகட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெறுவதற்கான பிரகாசமான வாய்ப்பு உருவானது.

18வது ஓவரை வீசிய ஷாம் கரண், அந்த ஓவரின் 4வது பந்தில் இங்ராமை அவுட்டாக்கினார். பின் அதே ஓவரின் கடைசி பந்தில் ஹர்சல் படேலை, கரண் வெளியேற்றினார். தொடர்ந்து 20வது ஓவரை மீண்டும் வீச வந்த கரண் முதல் பந்தில் டெல்லியின் ரபாடாவை போல்டாக்கினார். இதையடுத்து இவருக்கு ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்தது.

ஹாட்ரிக் பந்தை சந்தீப் லாமிசானே எதிர்கொண்டார். இதையும் கரண் அசுர வேகத்தில் யார்க்கராக வீச, லாமிசானே தடுக்க முயன்ற போதும், போல்டானார். இதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல்., அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற பெருமை பெற்றார் ஷாம் கரண். 

இதனால் டெல்லி அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை எடுத்தது. நான்காவது விக்கெட்டாக பண்ட் 144 ரன்னில் அவுட் ஆனார். அதன் பிறகு டெல்லி அணி 152 ரன்களில் ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 18வது வீரரானார் ஷாம் கரண்.

தவிர, சுமார் 12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றிலேயே குறைந்த வயதில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 2 வது பவுலர் என்ற பெருமை பெற்றார் ஷாம் கரண். மேலும், ஐபிஎல்., அரங்கில் குறைந்த வயதில் ஒரு இன்னிங்சில் நான்கு விக்கெட் கைப்பற்றிய வெளிநாட்டு வீரர்களில் ஒருவரானார். 

19 வயது 202 நாட்கள் மிட்சல் மார்ஷ் (4/25) புனே v டெக்கான், ஹைதராபாத், 2011 
20 வயது 302 நாட்கள் ஷாம் கரண் (4/11) v டெல்லி, மொஹாலி, 2019 * 
22 வயது 052 நாட்கள் நிகிதி (4/10) சென்னை v பஞ்சாப், புனே, 2018 

ஐபிஎல்., அரங்கில் மோசமான 7 விக்கெட் சரிவு 
8/7 டெல்லி v பஞ்சாப், மொஹாலி, 2019 (144/3->152) 
12/7 டெக்கான் v டெல்லி, டர்பன், 2009 (149/3->161) 
17/7 ராஜஸ்தான் v பெங்களூரு, பெங்களூரு, 2010 (75/3->92) 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 #KXIP vs DC #Hatrick wicket
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story