×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னையின் சுழலில் சிக்கிய டெல்லி; மீண்டும் கெத்தாக முதலிடம் பெற்ற சிஎஸ்கே.!

ipl 2019 - csk vs dc - won csk - points table - 1st csk

Advertisement

ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஏறக்குறைய இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திலும், டெல்லி அணி முதல் இடத்திலும் இருந்தன. இந்நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணி மோதும் 2வது ஆட்டம் நேற்று சென்னையின் சொந்த மண்ணில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி சென்னை அணியை பேட் செய்ய அழைத்தது. அந்த அணியின் டூ பிளசிஸ் 41 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா 37 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தோனி அதிரடியாக ஆடி 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் கடைசிவரை அட்டமிழக்காமல் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. நேற்றைய ஆட்டத்தில் தோனியின் அதிரடி ஆட்டத்தால் தான் சென்னை அணியின் ரன் உயர்ந்தது. இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் இருந்தே சொதப்பியது. அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் நீண்ட நேரம் களத்தில் நின்று 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார்.



 

சென்னை அணிக்காக சிறப்பாக பந்துவீசிய இம்ரான் தாகிர் 3.2 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 3 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆட்டத்தின் 17 வது ஓவரிலேயே, 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, டெல்லி அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணியின் இந்த வெற்றியினால் புள்ளிபட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 #CSK vs DC #csk
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story