×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உலகின் சிறந்த வீரர்களால் தான் இதை செய்ய முடியும் தல தோனியை புகழ்ந்து தள்ளிய ராஜஸ்தான் வீரர்.!

ipl 2019 - 12th leek - csk vs rr - dhoni - ben stocks

Advertisement

ஐபிஎல் 12ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 12 வது லீக் போட்டியில்   சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி கேப்டன் ரகானே, முதலில் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

இதன்படி களமிறங்கிய சென்னை வீரர்கள் சொற்ப ரன்களில் விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றினர். அதில் ரெய்னா மட்டும் 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து சற்று ஆதரவளித்தார். ஒரு கட்டத்தில் கேப்டன் தோனி மற்றும் பிராவோ நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக ஆடத் துவங்கிய பிராவோவும் 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

குறிப்பாக ராஜஸ்தான் அணியின் கடைசி ஓவரை வீசிய உனட்கட் ஓவரில் சென்னை அணி சிக்சர் மழை பொழிந்தது. அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்த ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்சர் அடித்து ஒரு ரன் அடித்தார். தொடர்ந்து அந்தப் ஓவரை சந்தித்த தல தோனி தொடர்ச்சியாக 3 சிக்சர்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

46 பந்துகளை சந்தித்த தோனி 75 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும். முடிவில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதன்பிறகு ஆடவந்த ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், தோனியின் இன்னிங்ஸ் குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இன்னிங்ஸை கடைசி வரை பொறுமையாக எடுத்துச்சென்று கடைசி ஓவர்களில் அபாரமாக ஆடி பணியை செவ்வனே செய்துமுடித்தார் தோனி. உலகின் தலைசிறந்த வீரர்களால் தான் இப்படியெல்லாம் ஆட முடியும். அதைத்தான் தோனி செய்தார் என்று புகழ்ந்து பேசினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 #m.s dhoni #CSK vs RR
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story