தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நேற்று, ஓசையே இல்லாமல் தல தோனி படைத்த சாதனை என்ன தெரியுமா?

indian players - highest matches - m.s dhoni 2nd place

indian players - highest matches - m.s dhoni 2nd place Advertisement

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. மழையால் ஆட்டம் பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஒரு வழியாக நேற்று அசத்தலாக ஆடிய இந்திய அணி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும், உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து 7வது முறையாகவும் வென்று உள்ளது.

indian cricket

இப்போட்டியின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான தல தோனி ஓசையே இல்லாமல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது சர்வதேச அளவில் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். நேற்றைய போட்டியின் மூலம் 341 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முதலிடத்தில் சச்சின் டெண்டுல் (463) உள்ளார். மூன்றாவது இடத்தில் ராகுல் டிராவிட் (340)  நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் அசாருதீன் (334) , கங்குலி (308) உள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#indian cricket #sachin #m.s dhoni
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story