இந்திய அணியில் ஏகப்பட்ட தமிழக வீரர்கள் விளையாடி இருந்தாலும்.. நடராஜனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு புகழ்ச்சி.? ஒரே காரணம் ..!
இந்திய அணியின் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சேலத்து நடராஜனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்திய அணியின் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சேலத்து நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 20 ஓவர் தொடரில் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி குறைந்த ரன்களையே கொடுத்திருந்தார். இதனையடுத்து இந்தியாவின் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் நடராஜனை பாராட்டி வருகின்றனர்.
நடராஜன், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தங்கராஜ் ஒரு நெசவுத் தொழிலாளி, தாய் சாந்தா சாலையோரத்தில் சில்லி சிக்கன் கடை நடத்துபவர். நடராஜன் 12 ஆம் வகுப்புவரை சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.
இதனையடுத்து சேலம், ஏ. வி. எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மை இளங்கலை படித்து முடித்து, அதே கல்லூரியில் முதுகலை படிப்பும் படித்தார். இதுவரை இந்திய அணியில் ஏகப்பட்ட தமிழக வீரர்கள் விளையாடி உள்ளனர். ஆனால் அவர்களிடம் வறுமை என்பது பெரிதாக காணப்படவில்லை. ஆனால் நடராஜன் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து படிப்படியாக தனது திறமையினை நிரூபித்து தேசிய அணிக்கு தேர்வானதே ஒட்டுமொத்த மக்களும் பாராட்டுவதற்கு காரணமாகும்.
இதனால்தான் எந்த வித பிரிவும் பார்க்காமல் மக்கள் அனைவரும் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பல தரப்பட்ட மக்களால் நடராஜனை இவ்வளவு கொண்டாடுகிறார் என்பது நிதர்சனமான உண்மை. அவரது குடும்ப சூழ்நிலையிலும், தன்மீது நம்பிக்கை வைத்து, தனது விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும், தனது திறமையின் காரணமாக இந்திய அணிக்கு தேர்வாகி, தன்மீது நம்பிக்கை வைத்து தேர்வு குழுவினருக்கும், ஒட்டு மொத்த இந்தியருக்கும், மேலும், இந்த உலகுக்கும் தன்னை யாரென்று நிரூபித்துள்ளார் நம்ம வீரத்தமிழன் நடராஜன். ஒரு தமிழனனின் திறமைக்கு நாமும் நன்றி சொல்வோம்.