×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டெஸ்ட் வெற்றியில் புதிய சாதனை படைத்த இந்திய அணி..! இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

india-vs-windies-first-test-india won by 272 and innings

Advertisement

இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வி அடைந்துள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோரின் சதத்தாலும், புஜாரா, ரிஷப் பந்த் ஆகியோரின் அரைசதத்தாலும் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அடுத்து வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. கிரேக் பிராத்வைட், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 3-வது ஓவரில் பிராத்வைட்டையும், 5-வது ஓவரில் பொவேலையும் முகமது ஷமி அடுத்தடுத்து வெளியேற்றினார்.

அதன்பின் வந்த ஷாய் ஹோப் 10 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து க்ளீன் போல்டானார். ஷிம்ரோன் ஹெட்மையர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். சுனில் அம்ப்ரிஸ் 12 ரன்கள் எடுத்த நிலையில ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டிஸ் 74 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

7-வது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸ் உடன் கீமோ பால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 94  ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது. 

மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய கீமோ பால் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடியது. அணியின் எண்ணிக்கை 147 ஆக இருக்கும் போது கீமோ பால் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன எனவே மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியின் ரோஸ்டன் சேஸ் மட்டும் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் சாமி 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் ஜடேஜா குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பாலோ அணை தவிர்க்க முடியாத மேற்கிந்திய தீவுகள் அணியை மீண்டும் பேட்டிங் செய்யுமாறு இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

தங்களது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை  சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கேரன் போவெல் மட்டும் அதிரடியாக ஆடி 83 ரண்கள் எடுத்தார். அவர் 93 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.

ஆனால் மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேற மேற்கிந்திய தீவுகள் அணி 51 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்த ஆட்டத்தின் மூன்றாவது நாளிலே இந்திய அணியி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணியின் சுழலில் சிக்கி சின்னாபின்னமான மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய அணியிடம் 272 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது.

இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக முதல் ஆட்டத்திலேயே அதிரடியாக ஆடி சதம் அடித்த இந்திய அணியில் பிரிதிவ் ஷா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த அபார வெற்றியின் மூலம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது.

இதுவரை இந்திய அணி டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியில் இதுவே மிகப் பெரிய வெற்றி ஆகும்.

Biggest innings wins for India:
innings & 272 runs v WI, Rajkot, 2018
innings & 262 runs v Afg, Bengaluru, 2018
innings & 239 runs v Ban, Dhaka, 2007
innings & 239 runs v SL, Nagpur, 2017
innings & 219 runs v Aus, Kolkata, 1999

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ind vs WI first test #india biggest test win #india won west indies in first test #pritiv shah first test #pritiv shah first man of the match
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story