×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் சொதப்பும் இந்திய அணி; பொறுமையை இழக்கும் ரசிகர்கள்; தோனியும் காலி

india lost early 3 wickets in 5th odi

Advertisement

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. இந்த தொடரின் 4 மற்றும் ஐந்தாவது போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக தோனிக்கு பதில் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.

இதனை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய அணி படு மோசமான தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி பதினைந்தாவது ஓவரிலேயே வென்று இந்திய அணியை குறைந்த பந்துகளில் வென்ற அணி என்ற பெருமையை பெற்றது.

இந்நிலையில் இந்த தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் சென்ற போட்டியில் மிக மோசமாக தோல்வியுற்ற இந்திய அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்குகிறது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த தோனி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த சாமி மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் கலீல் அஹ்மது மற்றும் குல்தீப் யாதவிற்கு பதிலாக களமிறங்குகின்றனர். 

துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆரம்பமுதலே தடுமாறினர். முதல் இரண்டு ஓவர்களில் முழுவதையும் சந்தித்த ரோகித் சர்மா ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அதனை தொடர்ந்து மேட் ஹென்றி வீசிய 5-வது ஓவரில் 16 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து போல்ட் வீசிய அடுத்த ஓவரிலேயே 13 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஷிகர் தவன் அவுட்டானார்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய இளம் வீரர் சுபம் கில் இந்த ஆட்டத்திலும் தனக்களிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்த தவறியுள்ளார். 11 பந்துகளை சந்தித்த அவர் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்துள்ளார். சென்ற ஆட்டத்தில் தோனி இருந்திருந்தால் நிச்சயம் கை கொடுத்து இருப்பார் என அனைவரும் பேசினர். ஆனால் இந்த ஆட்டத்தில் ரசிகர்களின் நம்பிக்கையை பெற தவறிவிட்டார் தோனி. அவரும் வந்தவேகத்திலேயே ஒரு ரன் மட்டுமே எடுத்து போல் வந்து அவுட்டானார் இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இதன்மூலம் இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் மட்டுமே எடுத்து கடந்த போட்டியை விட மோசமான நிலையில் உள்ளது. அம்பத்தி ராயுடு மற்றும் விஜய் ஷங்கர் களத்தில் இருந்து வருகின்றனர். இவர்கள் தாக்கு பிடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cricket #indvsnz 5th odi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story