×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கொடுமையே! நியூசிலாந்து அணி இதற்குமேல் பேட்டிங் செய்யவில்லையென்றால் இந்தியா அணிக்கு இவ்வளவு ரன்கள் இலக்கா!

if newzland don't bat again the target for india

Advertisement

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆட்டத்தின் நான்காவது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் மார்டின் கப்டில், விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் நிக்கோலஸ் மிகவும் பொறுமையாக ஆடினர். 19 ஆவது ஓவரில் ஜடேஜாவின் பந்தில் நிகால்ஸ் போல்ட் ஆகி வெளியேறினார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் 35 ஓவர்கள் வரை நிதானமாக ஆடினர். அரை சதம் அடித்த வில்லியம்சன் 26ஆவது ஓவரில் 67 ரன்கள் எடுத்த நிலையில் சாகல் பந்தில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து நீசம் மற்றும் கிராண்ட் ஹோம் விக்கெட்டை பறிகொடுத்தனர். 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. ராஸ் டெய்லர் 67 இரண்டிலும் தாம் லேதம் 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

ஒருவேளை மழையின் காரணமாக இன்று போட்டியை தொடர முடியவில்லை எனில் மீண்டும் ஆட்டம் நாளை நடைபெறும். அப்படியில்லாமல் நியூசிலாந்து அணி இதற்குமேல் பேட்டிங் செய்யாமல் ஓவர்கள் குறைக்கப்பட்டு இன்றே ஆட்டம் நடைபெற்றால் டக் ஒர்த் லீவிஸ்(DLS) முறைப்படி இந்திய அணி வெற்றிபெற 46 ஓவர்களில் 237 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்படுமாம். மைதானத்தில் மழை பெய்த பிறகு 46 ஓவர்களில் இந்த இலக்கை துரத்தி பிடிப்பது சற்று கடினமான காரியம்தான். என்ன நடக்கப் போகிறதோ? வருண பகவான் இந்தியாவிற்கு வழிவிடுவாரா?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#wc2019 #wc2019 semifinals #rain stopped play #India vs Newzland #target for india #dls #DLS rule
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story