×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நான் இந்தியாவின் கோச்சாக இருந்தால்... வீராட் கோலிக்காக உருகிய ரிக்கி பாண்டிங்...!

நான் இந்தியாவின் கோச்சாக இருந்தால்... வீராட் கோலிக்காக உருகிய ரிக்கி பாண்டிங்...!

Advertisement

நான் இந்தியாவின் கோச்சாக இருந்தால் கோலியை அழைத்துச் சொல்லி விடுவேன் - ரிக்கி பாண்டிங்..

விராட் கோலியை மூன்றாவதாக களமிறக்குவேன், என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். விராட் கோலி இருக்கிறார் என்றால், பாகிஸ்தானுடன் உலகக்கோப்பை போட்டியாக இருந்தாலும் சரிஅது எதிரணிக்கு ஏற்படுத்தும் பயம் என்பது அவர் இல்லாத போது இருக்காது. என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

கோலியை ஓப்பனிங் அனுப்புவது பிறகு நான்காவது ஆளாக அனுப்புவது என்று மாற்றிக் கொண்டே இருந்தால் அது அவரின் தன்னம்பிக்கையை இழப்பதற்கு வழிவகுக்கும். எனவே நானாக இருந்தால் அவரைக் அழைத்து, இதோ பார் கோலி, மூன்றாவது நிலையில் இறங்கு. இதுதான் உன் நிலை, இது மாறாது. உன்னை நீ நம்பு, கடின உழைப்பைப் கொடு, உலகின் சிறந்த பேட்டராக எது நம்மை உருவாக்கியது என்று நினைத்துப் பார், அந்தச் சிந்தனைகளுக்குள் செல், ரன்கள் கொட்டும் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

ஆனால் கோலிக்கு சில சவால்கள் இருக்கவே செய்யும் எல்லா கிரேட் பேட்ஸ்மேனுக்கும் இத்தகைய தருணங்கள் இருக்கும். கோலி நிச்சயம் மீண்டுவருவார், காலம் தான் பதில் சொல்லவேண்டும். மேலும் டி20 உலகக்கோப்பையில் விராட் கோலியை ஆடவைக்காமல் வேறு யாரையாவது ஆட வைத்து அவர் நன்றாக ஆடிவிட்டால், அதன் பிறகு விராட் கோலி இந்த நிலையில் மீண்டும் வருவது கடினம்.

நான் இந்தியாவாக இருந்தால் நிச்சயம் அவரை அணியில் வைத்திருப்பேன், ஏனென்றால் நான் அவருடைய உயர்ந்தப்பக்கங்களையே பார்ப்பேன். அவரை பார்முக்கு கொண்டு வந்து ஆடவைத்து விட்டால், அவருடைய இடத்தில் ஆடி ஷைன் பண்ணிய அந்த வீரரை விட கோலியின் பார்ம் திரும்புதல் என்பது எதிரணிக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும்.

அதனால் நான் என்ன சொல்வேன் என்றால், கோலியைக் அழைத்து ரிலாக்சாக இரு, ரிலாக்சாக ஆடு, என்று சொல்லி அவருக்கு நெருக்கடி கொடுப்பதை தவிர்ப்பேன், மீண்டும் சுவிட்ச் போட்டு அவர் விளக்கு எரியும் வரை காத்திருப்பேன், ரன்கள் வரும்.
கோலியை மீண்டும் பார்முக்குக் கொண்டு வர இந்திய பயிற்சியாளர்கள் புதிய வழியைக் கண்டுப்பிடிக்க வேண்டும். அதற்கு அவர் இறங்கும் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பது நல்ல விஷயம் அல்ல, என்று  ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sports #cricket #Virat Kohli #Coach of India
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story