×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தோனியின் க்ளவுஸை கவணிக்க முடிந்த ஐசிசியால் இதை கவணிக்க முடியவில்லையா! கொந்தளிக்கும் பிரபலங்கள்

Icc fails to investigate on bails

Advertisement

ஐசிசி உலகக்கோப்பை தொடரில் ஸ்டம்ப் மீது வைக்க பயன்படுத்தப்படும் பெயில்ஸ் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன.

ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு விக்கெட்டினையும் எடுக்க பந்துவீச்சாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் என்றால் பந்துவீச்சாளர்களின் கதி அவ்வளவு தான்.

குறிப்பாக ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டினை வீழ்த்த வேண்டிய பொறுப்பு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம். தனது வேலையை பந்துவீச்சாளர்கள் சரியாக செய்யும் போது போட்டியில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் அவர்களுக்கு சாதகமாக அமையவில்லையெனில் பந்துவீச்சாளர்கள் மிகவும் வேதனைபடுவது யதார்த்தம்.

அப்படியொரு சம்பவம் தான் நேற்றைய போட்டியில் பும்ராவிற்கு அரங்கேறியது. டேவிட் வார்னருக்கு பும்ரா வீசிய பந்து ஸ்டம்பில் அடித்தும் பெயில்ஸ் கீழே விழாததால் இந்திய அணிக்கு விக்கெட் கிடைக்கவில்லை. அதன்பிறகு இந்திய அணி முதல் விக்கெட்டை 14 ஆவது ஓவரில் தான் பெற்றது. மேலும் வார்னர் அரைசதம் அடித்தார்.

பந்து ஸ்டம்பில் அடித்தும் பெயில்ஸ் கீழே விழாமல் இருந்தது இது முதல்முறை அல்ல. இந்த உலகக்கோப்பையில் இது 5ஆவது முறையாகும். இதற்கு காரணம் புதியதாக பயன்படுத்தப்படும் பெயில்ஸில் உள்ள எலக்ட்ரானிக் கருவிகளால் அதன் எடை கூடியுள்ளது தான் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், தோனி அணிந்த கீப்பர் க்ளவுஸில் இருந்த ராணுவ முத்திரையை நீக்க மும்முரமாக செயல்பட்ட ஐசிசி, இந்த பெயில்ஸ் குறித்த பிரச்சனையை பற்றி மட்டும் ஏன் ஆலோசிக்கவில்லை என பல பிரபலங்கள் கேளிவி எழுப்பியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#wc2019 #icc #Bails
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story