தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்று சென்னை அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்பு! ஏன் தெரியுமா?

How many matches chennai won against to kolkaththa

how-many-matches-chennai-won-against-to-kolkaththa Advertisement

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 22 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதும் 23 வது போட்டி சென்னை அணியின் சொந்த மண்ணில் நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற்ற 22 போட்டிகளில் கொல்கத்தா, சென்னை, பஞ்சாப் மற்றும் கைதராபாத் அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளது.

IPL 2019

கொல்கத்தா மற்றும் சென்னை அணி தலா நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி முதல் இடத்தை தக்கவைக்கும். இந்நிலையில் இதுவரை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே நடந்த போட்டிகளில் யார் அதிக போட்டிகளில் வெற்றிபெற்ற அணி என்பதைத்தான் இங்கே பார்க்கவுள்ளோம்.

இதுவரை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் 18 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 11 போட்டிகளிலும் கொல்கத்தா அணி 7 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மேலும் சென்னையின் சொந்த மண்ணில் நடைபெற்ற 8 ஆட்டத்தில் சென்னை அணி 6 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

எனவே இன்றைய ஆட்டமும் சென்னை அணியின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ளதால் சென்னை அணி வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது .

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 #chennai super kings #kolkatta
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story