தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இணையத்தை தெறிக்கவிடும் தல ரசிகர்கள்

happy birthday to thala dhoni

happy birthday to thala dhoni Advertisement

எம்எஸ் தோனி என்றாலே இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒருவித உற்சாகம் பிறக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தல தோனி. அடுத்த மாதம் ஜூலை 7ஆம் தேதி தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் இப்போதே தங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை பதிவிட துவங்கிவிட்டனர்.

மகேந்திரசிங் தோனி, பான் சிங்கிற்கும் தேவகி தேவிக்கும் பிஹார், ராஞ்சியில் (தற்போது ஜார்கண்டில் உள்ளது) பிறந்தார். அவருடைய தாய் கிராமமான லவாலி உத்தர்கண்டின் அல்மோரா மாவட்டத்திலுள்ள லாம்கர்கா பகுதியில் உள்ளது. தோனியின் பெற்றோர், பான் சிங் எம்இசிஓஎன்-இல் இளநிலை நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றிய ராஞ்சிக்கு உத்தர்கண்டிலிருந்து சென்று குடியேறினர். தோனிக்கு ஜெயந்தி என்ற சகோதரியும் நரேந்திரா என்ற சகோதரரும் உள்ளனர்.

MS Dhoni

இந்தியன் ரயில்வேயில் முதலில் பணியில் சேர்ந்த தோனி பின்னர் கிரிக்கெட் மீது கொண்ட தீவிர பற்றால் விடா முயற்சியின் மூலம் பல தடைகளை தாண்டி இந்திய அணியில் இடம் பிடித்தார். குறைந்த காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தோனி இந்திய அணியின் கேப்டனாகவும் பணியாற்றினார். அவரது தலைமையில் இந்திய அணி அனைத்து விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்றது. குறிப்பாக 50 ஓவர் உலக கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அனைத்தையும் வென்றது.

மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார் தோனி. இந்திய அணியின் கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்த தோனி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் உலக கோப்பையில் ஆடி வருகிறார். தோனியின் பிறந்தநாள் ஜூலை 7. தோனியின் பிறந்த நாளான இன்று தோனியின் ரசிகர்கள் நள்ளிரவு முதலே வாழ்த்துக்களை தெரிவிக்க துவங்கிவிட்டனர். தோனியின் புகழை பரப்பும் விதமாக இணையத்தை கலக்கி வருகின்றனர்.









 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#MS Dhoni #happyBirthday Dhoni #dhoni birthday #DHoni fans
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story