தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் கெத்து காட்டும் சென்னை, மும்பை அணிகள்.!

புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் கெத்து காட்டும் சென்னை, மும்பை அணிகள்.!

Forbes says Mumbai Indians is most valuable team Advertisement

ஐபிஎல் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சீசனில் சென்னை, மும்பை அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. குறிப்பாக, மும்பை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று 9வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் அணிகளின் விலை மதிப்பு பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் 9,962 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், சென்னை அணி 8,811 கோடி ரூபாயுடன் 2-வது இடத்திலும் உள்ளது.

டாப் 5 அணிகள்:

1.மும்பை இந்தியன்ஸ்  9,962 கோடி ரூபாய்
2.சென்னை சூப்பர் கிங்ஸ் 8,811 கோடி ரூபாய்
3.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  8,428 கோடி ரூபாய்
4.லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 8,236 கோடி ரூபாய்
5.டெல்லி கேப்பிடல்ஸ் 7,930 கோடி ரூபாய்.  

 இதனையடுத்து பெங்களூரு 7,853 கோடி ரூபாயுடன் 6-வது இடத்திலும், ராஜஸ்தான் 7,662 கோடி ரூபாயுடன் 7-வது இடத்திலும், ஐதராபாத் 7,432 கோடி ரூபாயுடன் 8-வது இடத்திலும், பஞ்சாப் 7,087 கோடி ரூபாயுடன் 9-வது இடத்திலும், குஜராத் 6,512 கோடி ரூபாயுடன் 10-வது இடத்திலும் உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#csk #Mumbai indians
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story