×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளியானது விராட் கோலியின் இந்த ஆண்டு வருமானம்! பல பிரபலங்களை பின்னுக்கு தள்ளிய விராட்

forbes list of top earners

Advertisement

போர்ப்ஸ் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக சம்பளம் பெரும் முதல் 100 தனி நபர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது.

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 2018-ம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய இந்திய பிரபங்களின் டாப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தை தக்க வைத்துள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். அவர் இந்த ஆண்டில் மட்டும் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

அவரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி 228.09 கோடி ரூபாய் வருமானத்துடன் இரண்டாம் இடத்திலும், 2.0 படத்தில் நடித்துள்ள இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அவர் 185 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இந்தப் பட்டியலில் பிரபல நடிகை தீபிகா படுகோன் 4 ஆம் இடம் பிடித்துள்ளார். இவர் ரூ.112.8 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். இந்திய அளவில் முதல் 5 இடங்களுக்குள் பிடித்த முதல் பெண்மணி இவர் தான். அவரைத் தொடா்ந்து மகேந்திர சிங் தோனி (ரூ. 101.77 கோடி) 5வது இடத்தில் உள்ளாா்.அடுத்த 5 இடங்களில் வழக்கம் போல் அமீர் கான், அமிதாப் பச்சன், ரன்வீர் சிங், சச்சின் டெண்டுல்கர், அஜய் தேவ்கன் உள்ளனர்.

இந்த ஆண்டு திரைப்படங்கள் ஏதும் வெளியாகாததால், டாப்-2 இடத்திலிருந்து 13-ம் இடத்துக்கு சரிந்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இன்றைய ட்ரெண்டிங் பட்டியலில் உள்ள பிரியங்கா சோப்ரா 7-ம் இடத்திலிருந்து 49-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய நடிகை என்ற பெருமையை நயன்தாரா பெற்றுள்ளார். இவர், 15.17 கோடி ரூபாய் வருவாயுடன் 69-வது இடத்தை பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடி) 11-வது இடத்தை பிடித்துள்ளார். ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். தனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், டாப்சி (ரூ.15.48 கோடி) 67-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kholi #forbes top100 #Salman khan #nayanthara
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story