×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பச்சைப்புல் 43 ஆயிரம்.. ரசிக வெறியால் கல்லா கட்டிய FIFA..!

பச்சைப்புல் 43 ஆயிரம்.. ரசிக வெறியால் கல்லா கட்டிய FIFA..!

Advertisement

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்படும் ஜெர்சி, பந்து உள்ளிட்ட நினைவுப் பொருட்கள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த நினைவுப் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற மைதானத்தின் பச்சைப்புல் மேற்பரப்பையே நினைவுப் பொருளாக மாற்றி விற்பனை செய்ய ஃபிஃபா முடிவு செய்துள்ளது. மைதானத்தில் இருந்த புல் சிறு துண்டுகளாக வெட்டி சிறப்பு நினைவுப் பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவுப் பொருட்கள் ஒவ்வொன்றும் 450 அமெரிக்க டாலர் விலையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.43 ஆயிரம் ஆகும். இதனை உலகக் கோப்பை ரசிகர்கள் அதிக அளவில் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: குஷியோ குஷி! தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2,400 குறைவு! பொதுமக்கள் பெருமூச்சு விட்டு நிம்மதி....

போட்டி நடைபெற்ற மைதானத்தின் ஒரு பகுதியை நினைவாக வைத்திருக்க வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு இந்த விற்பனையை ஃபிஃபா அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்சி, பந்து உள்ளிட்ட பொருட்களைத் தொடர்ந்து தற்போது மைதானத்தின் பச்சைப்புல்லையும் விற்பனை செய்யும் நடவடிக்கை ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், விளையாட்டு நினைவுப் பொருட்களின் சந்தையில் புதிய வருமான வாய்ப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இன்ப அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்... 2 நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவு! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#FIFA #world cup #football #fans
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story