தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீரென உலகக்கோப்பை ஆட்டத்தில் இருந்து வெளியேறிய அதிரடி வீரர்! பயிற்சி ஆட்டத்தில் நடந்த சோகம்!

famous cricket palyer suddenly went out

famous cricket palyer suddenly went out Advertisement


உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது.  இதனால் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 10 அணிகளும், பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடியது.

cricket

பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ் பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் ஆஸ்திரேலிய அணி  பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரஸ்ஸல் பந்துவீசினார். அவர் வீசிய சுழல் பந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த உஸ்மான் கவாஜாவின் ஹெல்மெட் மீது அடித்து சுருண்டு விழுந்தார்.

இதனால் அடிபட்ட உஸ்மான் கவாஜா வலியால் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு தாடையில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. ஆனாலும் அவருக்கு ஏற்பட்ட காயம் பெரிய காயம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cricket #World cup 2019 #injured
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story