×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கெத்து காட்டிய நியூசிலாந்து அணி வீரர் டெவென் கான்வே.! டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி.!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள்

Advertisement

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி இறுதிப் போட்டி இங்கிலாந்தில் தான் நடைபெறவுள்ளது. வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த போட்டியில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 

இதனால் அதற்கு முன் நடக்கும் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி, முக்கியமான கருதுகிறது. இந்தநிலையில், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. 

அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேட்பன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 378 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டெவென் கான்வே அதிகபட்சமாக 200 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ராபின்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை துவங்கியது. அந்த அணி தனது முதல் இன்னிங்சில் 275 ரன்கள் மட்டுமே எடுத்தநிலையில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணி வீரர் ராய் பர்ன்ஸ் அதிகபட்சமாக 132 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், போட்டியின் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ராய் பெர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி ஆகியோர் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதினமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதனையடுத்து இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் 200 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணி வீரர் டெவென் கான்வே இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#england vs new zealand #test
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story