×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒற்றைக் கையால் சுற்றி சுற்றி அடிக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்! வைரலாகும் வீடியோ

ஒற்றைக் கையால் சுற்றி சுற்றி அடிக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்! வைரலாகும் வீடியோ

Advertisement

இன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டால் ஈர்கப்படாத இளைஞர்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர். நாளுக்குநாள் பிரபலமாகி வரும் கிரிக்கெட் போட்டிகளில் தங்களது திறமையை நிரூபித்து உயரிய நிலைக்கு செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது.

இத்தகைய கனவோடு தான் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சிவசங்கர். 23 வயதாகும் இவருக்கு இடதுகை மட்டுமே உள்ளது. 

இவரது பேட்டிங் திறமையை கண்டு வியந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் வாரியம் இவருடைய வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஒற்றைக் கையில் இவர் பேட்டினை பிடித்து நான்கு புறமும் சுழற்றி சுழற்றி அடிக்கும் திறமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அந்த வீடியோவின் குறிப்பில் இவரைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் இன்னும் பலபேர் தங்களது திறமையை வெளி உலகிற்கு காட்ட துடித்து வருவதாகவும் இந்திய கிரிக்கெட் ஆணையம் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Differently anled #cricket player #video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story