×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நேற்றைய போட்டிக்கு நடுவே தோனி செய்த காரியம்! கடுப்பான வார்னர்! நடந்தது என்ன? வைரல் வீடியோ.

சென்னை மற்றும் ஹைதராபாத் போட்டியின்போது நடுவர் அகல பந்து கொடுக்க முயன்றதும், ஆனால் தோனி முறைத்ததால் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்ட காட்சிகளும் இணையத்தில் வைரலானது.

Advertisement

சென்னை மற்றும் ஹைதராபாத் போட்டியின்போது நடுவர் அகல பந்து கொடுக்க முயன்றதும், ஆனால் தோனி முறைத்ததால் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்ட காட்சிகளும் இணையத்தில் வைரலானது.

சென்னை மற்றும் ஹைத்ராபாத் அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கு முன்னர் 7 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றதால் நேற்றைய போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் சென்னை அணி விளையாடியது.

அதிலும் சென்னை அணியின் கேப்டன் தோனி நேற்றைய போட்டியில் பல்வேறு புது திட்டங்களை வகுத்து விளையாடியதோடு நேற்று முழுவதும் மிகவும் ஆக்ரோஷத்துடனும் காணப்பட்டார். இந்நிலையில்தான் நேற்று 18.2 வது ஓவரை தாகூர் வீச ரஷித் கான் பேட் செய்து கொண்டிருந்தார். தாகூர் வீசிய பந்து அகல பந்தாக சென்றதை அடுத்து நடுவர் வைட்  கொடுக்க கைகளை விரித்தார். ஆனால்,  தல தோனி ஆக்ரோசமாக நடுவரை பார்த்தார். இதையடுத்து நடுவர் தனது முடிவை கைவிட்டு விட்டார்.

ஆனால் இதனை கவனித்துக்கொண்டிருந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், இது அகலபந்துதான் என கூறி செய்கை காட்டினார். மேலும் அவரது முகத்தில் ஒருவிதமான கோபம் இருந்ததும் அப்படியே தெரிந்தது. அதேநேரம் அந்த பந்தை ரீபிளே செய்து பார்த்தபோது அது அகல பந்துதான் என்பது உறுதியானது.

இதனால் தோனிக்கு எதிராக சிலர் விமர்சனங்களை வைக்க தொடங்கினர். ஆனால், ஒரு அணியின் கேப்டனாக தோனி நடந்துகொண்டது சரிதான் எனவும், அவர் மீது எந்த தவறும் இல்லை என கவாஸ்கர் உள்ளிட்ட பிரபலங்கள் தோனிக்கு ஆதரவாக கருத்து கூற தற்போது அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#SRH vs CSK #wide ball video #dhoni reaction #viral video #latest ipl videos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story