×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அனைவரின் முன்பும் தனது மனைவியை கேலி செய்து சிரித்த தல தோனி! ஏன் தெரியுமா?வைரலாகும் வீடியோ!

dhoni fun with sakshi video vairal

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருப்பவர் தல தோனி. இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் தமிழகத்தில் தோனிக்கென தனிரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தோனி சென்னை அணியின் தலைவராக இருந்து பல முறை வெற்றி பெற்று பெருமை அடைய செய்துள்ளார். 

இவரது மனைவி சாக்ஷி. இருவரும் சிறந்த ஜோடியாக விளங்கி வருகின்றனர்.மேலும் இருவரும் ஒன்றாக பல விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் தனது சுவாரஸ்யமான வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் தோனி தற்போதும் தனது மனைவியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தோனியின் மனைவி சாக்‌ஷி விளம்பரம் ஒன்றிற்காக வசனத்தை பேசி, மனப்பாடம் செய்து ஒத்திகைப் பார்க்கிறார். மேலும் பேப்பரில் உள்ளதை பார்த்து பேசும்போதும் தவறாக பேசுகிறார். இந்நிலையில் அதனை கிண்டல் செய்து தோனி, பேப்பரை பார்த்து வாசிக்க முடியாத நீங்கள் எப்படி நடித்து காட்டுவீர்கள் என்று விளையாட்டாய் கூறியுள்ளார். இதனை கேட்டு சாக்ஷி மற்றும் அங்கிருந்த அனைவரும் சிரித்துள்ளனர். இந்த வீடியோ எடுத்து ஒரு ஆண்டுகள் ஆனநிலையில் அதனை தோனி தற்போது பகிர்ந்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dhoni #Sakshi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story