தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

CSK ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! ஐபிஎல் 2020க்காக ஒரு மாதத்திற்கு முன்பே சென்னை வரும் தோனி!

Dhoni comes to chennai at march 1

Dhoni comes to chennai at march 1 Advertisement

ஐபிஎல் 2020 தொடருக்கான லீக் அட்டவணை நேற்று வெளியானது. மார்ச் 29 ஆம் தேதி துவங்கும் இந்த ஆண்டின் முதல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. 

உலகக்கோப்பை அரையிறுதிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்குபெறாத தோனி இந்த ஐபிஎல் சீசனில் களமிறங்கவுள்ளார். இந்திய அணியில் அவரது எதிர்காலம் என்னவென்பதை இந்த ஐபிஎல் தொடர் நிர்ணயிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

MS Dhoni

நீண்ட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் ஜார்கண்ட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார் தோனி. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்வதற்காக வரும் மார்ச் 1 ஆம் தேதி தோனி சென்னை வரவுள்ளார். 

கடந்த ஆண்டுகளில் இந்திய அணிக்காக பிஸியாக இருந்த தோனி ஐபிஎல் பயிற்சிக்காக கடைசி கட்டத்தில் தான் இணைவார். ஆனால் இந்த ஆண்டு எந்த போட்டியிலும் கலந்துகொள்ளாததால் ஒரு மாதத்திற்கு முன்பே அணியினருடன் பயிற்சியில் கலந்துகொள்கிறார். நிச்சயம் பயிற்சியின் போதே தோனியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#MS Dhoni #csk #Ipl 2020
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story