×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஷிகார் தவான் செய்த செயலால் படகோட்டிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த பரிதாபம்..

சுற்றுலா சென்ற இடத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தவான் செய்த காரியத்தால் படகோட்டி ஒருவர் சிக்கலில் சிக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

சுற்றுலா சென்ற இடத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தவான் செய்த காரியத்தால் படகோட்டி ஒருவர் சிக்கலில் சிக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு பிறகு தவான் தனக்கு கிடைத்த நீண்ட இடைவெளியில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் தவான் தனது நண்பர்களுடன் வாரணாசிக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் காலபைரவர் கோயில் என அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வழிபட்ட அவர் பின்னர் கங்கை நதியில் படகு சவாரியும் செய்திருந்தார்.

படகு சவாரி செய்தபோது தவான் படகில் இருந்தவாறு பறவைகளுக்கு தனது கைகளால் உணவு வழங்கியுள்ளார். மேலும் அந்த காட்சியை தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படமாகவும் வெளியிட்டுள்ளார் தவான். இதுதான் தற்போது பிரச்சனையாக மாறியுள்ளது.

இந்தியாவில் தற்போது பறவை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரணாசி மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் பறவைகளுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் உணவு வழங்கக்கூடாது எனவும், இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் எனவும் படகை இயக்குபவர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் இந்த உத்தரவை மீறி தவான் பறவைகளுக்கு உணவு வழங்கி இருப்பதால், அவர் சென்ற படகை ஓட்டிச்சென்ற படகோட்டிக்கு நோட்டீஸ் அனுப்பு அரசு முடிவு செய்துள்ளதாம். சுற்றுலா பயணியாக சென்ற தவானுக்கு இதுகுறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை எனவும், ஆனாலும் படகோட்டிக்கு இதுகுறித்து முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அவர் மீது வழக்கு தொடரப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dhavan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story