கடைசி இடத்தில் இருந்து ஜெட் வேகத்தில் முன்னேறிய சிஎஸ்கே.! புள்ளி பட்டியல் முழு விவரம்.!
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வெற்றி பெற்றது. நேற்றய ஆட்டத்தின் வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362