இது மட்டும் நடந்துவிட்டால் சென்னை அணியின் சந்தோசம் நீடிக்காது! என்ன விஷயம் தெரியுமா?
Chennai team again got first place in point table ipl 2019

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அனைத்து அணிகளும் கோப்பையை வெல்ல போராடி வருகின்றன. நடப்பு சாம்பியனான சென்னை அணி முதல் மூன்று போட்டிகளில் வரிசையாகா வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. கடைசியாக மும்பை அணியுடன் நடந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததை அடுத்து புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்றது.
இந்நிலையில் சென்னையில் நடந்த இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி பஞ்சாப் அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த சென்னை அணி 160 ஓட்டங்கள் பெற்றதன்மூலம் பஞ்சாப் அணிக்கு 161 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 161 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடியது.
இறுதியில் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பஞ்சாப் அணி 22 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஹைதராபாத் அணி மும்பை அணியுடன் விளையாடி வருகிறது. ஏற்கனவே கைதராபாத் அணி நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல ரன்ரேட்டிலும் கைதராபாத் அணி சென்னை அணியைவிட அதிகம் இருப்பதால் மும்பை அணியை தோற்கடித்து ஹைதராபாத் அணி வெற்றிபெற்றால் சென்னை அணியின் முதல் இடம் பறிக்கப்பட்டு கைதராபாத் அணிக்கு சென்றுவிடும்.