மிக மோசமான நிலையில் சென்னை அணி! சோகத்தில் சென்னை ரசிகர்கள்!
Chennai super kings in weak position against to rajasthan royals
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 24 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை, கொல்கத்தா, மும்பை, பஞ்சாப் அணிகள் முதல் நான்கு இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியான சென்னை அணி ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் 25 வது போட்டியானது இன்று ராஜஸ்தான், சென்னை அணிகள் இடையே இன்று ராஜஸ்தானில் நடந்துவருகிறது. முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட் செய்ய ராஜஸ்தான் அணியை அழைத்து. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதல் சொதப்பியது. ஒருவழியாக 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டம் எடுத்து. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 28 ஓட்டங்கள் பெற்றார்.
இதனை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி ஆரம்பம் முதல் சொதப்பி வருகிறது. முதல் ஓவரில்லையே அணியின் தொடக்க வீரர் வாட்சன் ரன் அடிக்காமல் வெளியேறினார். அதனை தொடரந்து சுரேஷ் ரைனா, டுப்ளஸி, ஜாதவ் என முதல் 6 ஓவரில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஆறு ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 24 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சோகமான நிலையில் உள்ளது. சென்னை அணியின் இந்த மோசமான ஆட்டத்தால் சென்னை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.