அதிர்ச்சி..! 140 கி.மீ வேகதில் பந்து வீசிய பவுன்சர்! உதட்டில் ரத்தக் காயத்துடன் மூளையதிர்ச்சி ஏற்பட்டு வெளியேறிய கேமரூன் கிரீன்...! ஷாக் வீடியோ...!!!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கஸ் அட்கின்சன் வீசிய பவுன்சர் கேமரூன் கிரீனின் ஹெல்மெட்டில் தாக்கியதால் மூளையதிர்ச்சி ஏற்பட்டு வெளியேறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 3 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் வீசிய பவுன்சர் அவரது ஹெல்மெட்டில் பலமாகத் தாக்கியது. இதில் உதட்டில் ரத்தக்காயம் ஏற்பட்டதுடன், மூளையதிர்ச்சியும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் போட்டியிலிருந்து வெளியேறினார்.
140.8 கி.மீ. வேகத்தில் வந்த பவுன்சர்
போட்டியின் போது கஸ் அட்கின்சன் மணிக்கு சுமார் 140.8 கி.மீ. வேகத்தில் பவுன்சர் வீசினார். அந்தப் பந்து கேமரூன் கிரீனின் ஹெல்மெட் கிரில்லில் பலமாக மோதியது. இதனால் அவரது உதட்டில் ரத்தக்காயம் ஏற்பட்டது. உடனடியாக காயத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறிய கிரீனுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பரிசோதனையில் அவருக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வீரராக ஆலிவர் பீக் களமிறக்கம்
மூளையதிர்ச்சி காரணமாக கேமரூன் கிரீன் தொடர்ந்து விளையாட முடியாத நிலையில், அவருக்குப் பதிலாக மூளையதிர்ச்சி மாற்று வீரராக ஆலிவர் பீக் களமிறங்கினார். மருத்துவக் குழுவினர் கிரீனின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியில் காயங்களால் அவதிப்பட்டு வந்த அவருக்கு தற்போது மேலும் ஒரு காயம் ஏற்பட்டிருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
KKR அணிக்கு அறிவிக்கப்பட்ட மறுநாளே காயம்
ஐபிஎல் 2027 சீசனுக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி கேமரூன் கிரீனைத் தக்கவைத்துள்ளதாக அறிவித்த மறுநாளே இந்தக் காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் அவரை அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்த KKR அணிக்காக 14 போட்டிகளில் விளையாடிய கிரீன், 322 ரன்கள் எடுத்ததுடன் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். தற்போது ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்பது குறித்த எதிர்பார்ப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.