தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புள்ளி பட்டியலில் முந்தப்போவது யார்..?!! பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்..!!

புள்ளி பட்டியலில் முந்தப்போவது யார்..?!! பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்..!!

Bengaluru-Kolkata teams will face each other in the 36th league match which will be played at Bengaluru Chinnaswamy Stadium today. Advertisement

இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 36 வது லீக் போட்டியில் பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 36 வது லீக் போட்டியில் பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகளும் கொல்கத்தாவில் மோதிய முதல் போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்ற நிலையில், 2 வது முறையாக இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்றுள்ள பெங்களூரு அணி 3 வெற்றி 4 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5 வது இடத்தை பிடித்துள்ளது.

அந்த அணியின் கேப்டன் பாப்-டூ-பிளசி காயம் காரணமாக இம்பாக்ட் வீரராக களமிறங்குவதால் விராட் கோலி அணியை வழிநடத்தி வருகிறார். பெங்களூரு அணிக்கு பேட்டிங் வரிசையில் பாப்-டூ-பிளசி 405 ரன், விராட் கோலி 279 ரன், கிளைன் மேக்ஸ்வெல் 253 ரன் ஆகியோர் வலு சேர்க்கின்றனர். பந்து வீச்சில் முகமது சிராஜ்  13 விக்கெட், ஹர்ஷல் பட்டேல் 10 விக்கெட் வலு சேர்க்கின்றனர் கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளை வீழ்த்திய பெங்களூரு அணி அதே உத்வேகத்துடன் களமிறங்கும்.

இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்றுள்ள கொல்கத்தா அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன்  8 வது இடத்தை பிடித்துள்ளது. கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்த கொல்கத்தா வெற்றிப்பாதைக்கு திரும்ப போராடும். அந்த அணியின் பேட்டிங் வரிசையில் ரின்கு சிங் 233 ரன், வெங்கடேஷ் அய்யர் 254 ரன் வலு சேர்க்கின்றனர். சுனில் நரைன் 7 போட்டியில் 6 விக்கெட்)  வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 7 போட்டியில் ஆடி 1 விக்கெட் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சிறிய மைதானமான சின்னசாமி ஸ்டேடியத்தில் இரு அணிகளுமே ரன் குவிப்பில் ஈடுபடும் என்ற போதிலும் உள்ளூரில் விளையாடுவது பெங்களூரு அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Royal Challengers Bengaluru #kolkata knight riders #RCB vs KKR #IPL 2023 #ipl t20
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story