மைதானத்தின் நடுவே இங்கிலாந்து அணி வீரர் செய்த காரியம்.. கைதட்டி ரசித்த ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..
இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் மைதானத்தில் தலைகீழாக நடந்துசென்ற வீடியோ இணையத்தில் வைர
இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் மைதானத்தில் தலைகீழாக நடந்துசென்ற வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்து. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி 286 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 482 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவரும்நிலையில், மூன்றாம் நாளான இன்று காலை, மைதானத்தில் இருந்த ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இங்கிலாந்து அணி வீரர் ஸ்டோக்ஸ் தலைகீழாக சிறிது தூரம் நடந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள், மைதானத்தில் அவருக்கு பெரிய அளவில் கைதட்டல்களை வழங்கி உற்சாகப்படுத்தினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.