×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! பிசிசிஐ வெளியிட்ட புதிய அறிவிப்பு

bcci announces the list of games for india in 2019-20

Advertisement

உலக கோப்பை தொடருக்குப் பின் 2019-20 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்கள் குறித்த அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. இந்த காலகட்டத்தில் இந்திய அணி 5 டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் 12 டி20 போட்டிகளில் ஆடுகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் ஜூலை 14ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு மாதங்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் செப்டம்பர் 15ஆம் தேதி துவங்கி அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட போகும் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

முதலில் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 23 வரை 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நவம்பர் மாதத்தில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 

அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு வந்து 3 டி20 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. பின்னர் ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஜிம்பாப்வே 3 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவிற்கு வந்து ஆடுகின்றன.

அதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா அணி மார்ச் மாதத்தில் மீண்டும் இந்தியாவிற்கு வருகை தந்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த காலகட்டத்தில் இந்திய அணி ஆடும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாகும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#BCCI #Indian cricket team #2019-20 schedule
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story