ஆஸ்திரேலிய அணியையே நடுநடுங்க வைத்த பங்களாதேஷ் அணி! நேற்று நடந்த பரபரப்பு
bangladesh made australia victory fear
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான 26ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு 121 ரன்கள் எடுத்த போது ஆரோன் ஃபின்ச் 53 ரன்கள் எடுத்து சவுமியா சர்க்கார் பந்து வீச்சில் தன் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்பு வந்த, கவாஜாவுடன் சேர்ந்து டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 166 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியா 313 ரன்கள் எடுத்த போது 45 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய, மேக்ஸ்வெல் 32 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். கவாஜா அதிரடியாக விளையாடி 89 ரன்கள் எடுத்து சவுமியா சர்க்கார் பந்திலேயே அவுட்டானார். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 381 ரன்கள் எடுத்து 5 விக்கெட்களை பறிகொடுத்துள்ளது.
382 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு நான்காவது ஓவர்லயே ஆரோன் பின்ச், சவுமியா சர்க்காரை ரன் அவுட் ஆக்கி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சாகிப், தமீம் இக்பால் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் துரதிஷ்டவசமாக 19வது ஓவரில் 41 ரன்கள் எடுத்து சாகிப், ஸ்டோனிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 102.
அதனைத் தொடர்ந்து தமீம் இக்பால் 62 ரன்னிலும் லிட்டன் தாஸ் 20 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பிறகு ஜோடி சேர்ந்த குல்புதீன் மற்றும் மக்மதுல்லா மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சிறப்பாக ஆடி 45 ஓவரிலேயே பங்களாதேஷ் அணிக்கு 302 ரன்கள் சேர்த்தனர். இவர்கள் இருவரும் களத்தில் இருந்தவரை பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது; ஆஸ்திரேலிய அணிக்கும் கொஞ்சம் நடுக்கம் ஏற்பட்டது.
ஆனால் அதிரடியாக ஆடிய மக்மதுல்லா. குலத்தார் நைல் வீசிய 46 ஆவது ஓவரில் எல்லைக்கோட்டில் கேட்ச் கொடுத்து 69 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில் சபீர் வந்த வேகத்திலே விக்கெட்டை இழக்க பங்களாதேஷ் அணியின் நம்பிக்கை தகர்ந்தது; ரன் வேகமும் குறைந்தது. பின்னர் சுதாரித்த ஆஸ்திரேலியா அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றிபெற்றது. கடைசி வரை நின்று சிறப்பாக ஆடிய முஷபிகுர் சதம் அடித்தார். 50 ஓவர் முடிவில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்தது
ஒருவேளை ஆஸ்திரேலிய அணி 350 ரன்களுக்கு குறைவாக எடுத்திருந்தால் வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள பங்களாதேஷ் அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். ஆஸ்திரேலிய அணிக்கு நிகராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பங்களாதேஷ் பேட்ஸ்மேன்களை ரசிகர்கள் வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.