×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீண்ட நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்.! விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீரர்.!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட்

Advertisement

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. அதில் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 865 புள்ளிகளை பெற்று விராட்கோலியை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். 

இந்திய அணித் தலைவர் விராட் கோலி 857 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா (825 புள்ளி) 3-வது இடத்தில் தொடர்கிறார். 1258 நாட்களாக விராட் கோலி முதலிடத்தை தக்க வைத்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த 4-வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றுள்ளார். ஏற்கனவே பாகிஸ்தானை சேர்ந்த ஜாகீர் அப்பாஸ் (1983-84), ஜாவித் மியாண்டட் (1988-89), முகமது யூசுப் (2003) ஆகியோர் முதலிடம் வகித்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#virat #Babar azam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story