×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இறுதிப்போட்டியில் இந்திய அணியை வச்சு செய்த ஆஸ்திரேலியா.! தேம்பி.. தேம்பி கண்ணீர் விட்டு அழுத முன்னணி வீராங்கனை!

austrelia won indian womens team

Advertisement

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21-ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் ‘நாக்-அவுட்’ சுற்று முடிவில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் உலக கோப்பையை கைப்பற்றப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு துவங்கியது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.  

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்து இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் அவுஸ்திரேலியா மகளிர் அணி, டி20 உலகக்கோப்பையில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆஸ்திரேலிய  மகளிர் அணியில் அதிகபட்சமாக பெத் முனி 78 ஹீலி 75 ரன்கள் எடுத்தனர். இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 33, வேதா 19 ரிச்சா கோஷ் 18 ரன்கள் எடுத்தனர். இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 , பூனம், ராதா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்திய அணியின் 16 வயது இளம் வீராங்கனையும், துவக்க வீரருமான ஷபாலி வர்மா இந்திய அணியின் அடுத்தடுத்த விக்கெட்டுகளால், அப்போதே தோல்வியை நினைத்து டீ சார்ட்டால் முகத்தை மூடி அழுதார். இந்திய அணி இறுதிப்போட்டி வரை வந்ததற்கு முக்கிய காரணம் ஷபாலி வர்மா என்றே கூறலாம். ஷபாலி வர்மா அழுத வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shafali verma #crying #world cup
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story