×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்று முதல் இடத்திற்கு செல்லுமா ஆஸ்திரேலிய அணி!? அதனை தடுக்குமா வங்கதேசம்!

austrelia will go to first place?

Advertisement

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25 வது லீக் ஆட்டத்தில் நேற்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தநிலையில் 26 ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் இன்று விளையாட உள்ளன. நியூசிலாந்து 9 புள்ளிகளை பெற்று முதல் இடத்திலும், இங்கிலாந்து அணி  8 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திலும், அதேபோல் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகள் வெற்றி பெற்று  8 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இந்தநிலையில், இன்று நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் 10 புள்ளிகளை பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுவிடும். இதனால் இன்றைய போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக உள்ளது.

ஆஸ்திரேலியா அணி வீரர்களின்  உத்தேச பட்டியல்:
பின்ச், வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர், ஸ்டார்க், கம்மின்ஸ், ஜம்பா.

வங்காளதேசம் அணி வீரர்களின்  உத்தேச பட்டியல்:
தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர், லிட்டான் தாஸ், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், மெஹிதி ஹசன், முகமது சைபுதீன், மோர்தசா, முஸ்தாபிஜூர் ரகுமான்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#australia vs bangladesh #World cup 2019
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story