×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தோனி, தினேஷ் கார்த்திக், சாஹா இவர்கள் மூவரில் இவர் தான் சிறந்த விக்கெட் கீப்பர்.! அஸ்வின் யாரை கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

தோனி, தினேஷ் கார்த்திக், சாஹா இவர்கள் மூவரில் இவர் தான் சிறந்த விக்கெட் கீப்பர்.! அஸ்வின் யாரை கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் தோனி, தினேஷ் கார்த்திக், சாஹா மூவரில் யார் சுழற் பந்து வீச்சிக்கு எதிராக சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் ரசிகர்கள் பலர் அஸ்வினிடம் கேள்வி எழுப்பிய நிலையில், குறிப்பிட்ட கேள்விகளை தேர்வு செய்த அஸ்வின், அதற்கு பதிலளித்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதில், தோனி, தினேஷ் கார்த்திக் மற்றும் சாஹா இவர்கள் மூவரில் யார் சுழற் பந்து வீச்சிக்கு எதிராக சிறந்த விக்கெட் கீப்பர் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார்.

அஸ்வின் கூறுகையில், 3 வீரர்களும் திறமையானவர்கள். தோனி பல கடினமான கேட்ச்களை மிக சுலபமாக பிடித்துள்ளார். தமிழ்நாட்டில் தினேஷ் கார்த்திக் உடன் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளேன். ஆனால், மூவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென்றால், பல கடினமான விக்கெட்டுகளை மிக சுலபமாக எடுத்த விக்கெட் கீப்பர் தோனி தான். ஸ்டம்பிங், கேட்ச்கள் என எதையும் அவர் தவறவிடுவதை நான் பார்த்ததில்லை. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக மிகவும் திறமையான கீப்பர்களில் ஒருவர் தோனி என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aswin #Msd #keeper
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story