×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேண்டுமென்றே ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறிய அஸ்வின்.! என்ன காரணம்.? வைரல் வீடியோ.!

வேண்டுமென்றே ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறிய அஸ்வின்.! என்ன காரணம்.? வைரல் வீடியோ.!

Advertisement

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய 20 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. நேற்றைய ஆட்டத்தில் டாஸ்  வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட்டிங் செய்த   ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது

இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது . இதனால் 3 ரன்கள்  வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் அஸ்வின் ரிட்ட்யர்ட் அவுட் ஆகி வெளியேறினார். இதன்மூலம் ஐபிஎல்லில் ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறும் முதல் வீரர் என்ற பெயருக்கு அவர் சொந்தக்காரர் ஆனார். அஸ்வின் 28 ரன்கள் எடுத்திருந்த போது ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். அஸ்வின் ரன்கள் குவிக்கும் வேகம் குறைவாக இருந்ததால், அவரை மாற்றிவிட்டு இளம் வீரர் ரியான் பராக்கை களத்துக்கு ராஜஸ்தான் அணி அனுப்பியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ashwin #retired out
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story