×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தல தோனியை ஓரங்கட்டிய அஜித் அகர்கர்.! விராட் கோலி தலைமையில் ஆல்-டைம் ஐபிஎல் அணி அறிவிப்பு.!

தல தோனியை ஓரங்கட்டிய அஜித் அகர்கர்.! விராட் கோலி தலைமையில் ஆல்-டைம் ஐபிஎல் அணி அறிவிப்பு.!

Advertisement

ஐபிஎல் 2022 தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் தன்னுடைய ஆல்டைம் பேவரைட் ஐபிஎல் பிளேயிங் 11-ஐ ரிலீஸ் செய்துள்ளார். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், நான்கு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனியின் பெயர் இல்லை.

அவர் ரிலீஸ் செய்த அணியின் கேப்டனாக விராட் கோலியை அகர்கர் தேர்வு செய்துள்ளார். கிறிஸ் கெய்லுக்கு ஓபனிங் பேட்ஸ்மேன் அந்தஸ்தையும், இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்கை மற்றொரு தொடக்க ஆட்டக்காரராகவும் தேர்வு செய்துள்ளார்.

நம்பர் 3-ல் சுரேஷ் ரெய்னாவை சேர்த்துள்ள அகார்கர், 4வது இடத்துக்கு விராட் கோலியையம் தேர்வு செய்துள்ளார். மிடில் ஆர்டரில் ரோகித் சர்மாவும், அவருக்கு அடுத்த இடத்தை ஏபி டிவில்லியர்ஸூக்கும் கொடுத்துள்ளார். பந்துவீச்சாளர்களில் லசித் மலிங்கா, சுனில் நரைன், புவனேஷ்வர் குமார், ஹர்பஜன் சிங் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் அகார்கரின் ஆல்டைம் ஐபிஎல் அணியில் இடம்பிடித்துள்ளனர். இந்த அணியில் தோனியின் பெயரை அவர் சேர்க்காதது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ajit agarkar #Msd #virat
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story