இந்திய சீரியல் தொடரை பார்த்த மனைவி! தொலைக்காட்சியை அடித்து நொறுக்கிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! வைரல் வீடியோ!
afridi damaged his TV

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினி “நீங்கள் எப்பொழுதாவது தொலைக்காட்சியை உடைத்தது உண்டா" என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடியிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த அப்ரிடி “என் மனைவியால் ஒருமுறை அவ்வாறு நடந்தது என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய சேனலில் வெளியாகும் சீரியல்களை பாகிஸ்தானில் பலரும் பார்ப்பதுண்டு. ஆனால் நான் என் மனைவியிடம் குழந்தைகளை இதில் ஈடுபடுத்த கூடாது, எனவே நீ தனியாக பார்க்குமாறு அறிவுறுத்தினேன். ஆனால், அதை அவர் மீறினார். அப்போது என் மகள் ஒரு தொடரில் காட்டப்படுவது போல ஆரத்தி செய்வது போல் பாவனை செய்தாள். இதனால் கோபமடைந்த நான் தொலைக்காட்சியை உடைத்துவிட்டேன் என கூறினார்.
இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் இந்து மத சடங்கு சம்பிரதாயங்களை அப்ரிடி கிண்டல் செய்ததாக அவர் மீது பலரும் குற்றம்சாட்டி விமர்சனம் செய்து வருகின்றனர்.