×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

4 பந்துகளில் 4 விக்கெட்; மீண்டும் புதிய உலக சாதனை படைத்துள்ள ஆப்கானிஸ்தான் வீரர்.!

afkhanistan vs ayerland t20 series

Advertisement

அயர்லாந்துக்கு எதிரான நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார் ஆப்கானிஸ்தான் அணியின் ரசித் கான்.

இந்தியாவில் உள்ள உத்தரகாண்ட்டின் டேராடூன் மைதானத்தை தன் சொந்த கிரிக்கெட் விளையாடும் மைதானமாக அறிவித்து ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக  3 டி20, 5 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடி வருகின்றது. 

முதல் இரண்டு டி20 போட்டிகளில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் அணி, நேற்று நடந்த 3வது டி20 போட்டியிலும் 32 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குறிப்பாக இரண்டாவது டி20 போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. அந்த அணியின் ஹஸ்றதுல்லா சசாய் 62 பந்துகளில் 162 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதில் 16 சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும்.

இந்நிலையில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி 36 பந்தில் 81 ரன்கள் அடித்து அசத்தியதால் ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது. 211 ரன் இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி 178 ரன்கள எடுத்ததால் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் ரசித் கான் 15.6 பந்தில் கெவின் ஓ பிரனை வீழ்த்தினார். தொடர்ந்து அவர் விசிய 18வது ஓவரின் முதல் 3 பந்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்தார். 



 

விக்கெட் விபரம்:
15.6 பந்து - கெவின் ஓ பிரனை 
17.1 பந்து - ஜார்ஜ் டோக்ரெல் 
17.2 பந்து - சேன் கெட்காடே 
17.3 பந்து - சிமி சிங் 

அதுமட்டுமில்லாமல் 19.2வது பந்தில் ஜோவ்னா லிட்டில் என்ற வீரரை அவுட்டாக்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துள்ளார். 

சாதனை:
சரவதேச டி20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை ரசித் கான் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டி வரிசையில் 2வது இடம் பிடித்துள்ளார். இலங்கையில் மலிங்கா ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#afkhan vs Ierland #T20 Series #icc
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story