×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளுக்கு விதிகளை மாற்ற ஐசிசி திடீர் முடிவு. அதிர்ச்சியில் அந்த அணி வீரர்கள்..!!

afkanistan - aierland - test series - 4days

Advertisement

டெஸ்ட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு மட்டும் ஐந்து நாட்கள் நடைபெறும் போட்டியானது நான்கு நாட்களாக குறைக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஆசிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரையும் பிரமிக்க வைத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அணி அப்கானிஸ்தான் என்றால் அது மிகையாகாது.

ஏனெனில் பலம்வாய்ந்த இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக நடந்த போட்டிகளில் அந்த அணியை தோல்வியடையச் செய்து சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது. இதில் இந்திய அணியை ஆட்டம் காணச் செய்து ஒரு போட்டியை யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டையில் முடித்தது.

ஆசிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பாகவே ஐசிசியால்  டெஸ்ட் அந்தஸ்து ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் ஐசிசியின் நிரந்தர உறுப்பினர் நாடாகவும் தகுதி பெற்றது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி மிகவும் மோசமான நிலையில் அமைந்தது இதனால் ஐசிசி இந்த இரண்டு அணிகளுக்கும் ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக நடத்த திடீர் முடிவு செய்துள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Spark #afkanistan #aierland #test 4 days
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story