×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆப்கானிஸ்தான் அணிக்கு இயற்கையின் காரணமாக கூட அந்த அதிர்ஷ்டம் இல்லை! நேற்றும் நடந்த சோகம்!

afghanistan vs bangaladesh match

Advertisement


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி இங்கிலாந்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. உலக கோப்பை தொடரின் 31-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நேற்று நடைபெற்றது. அதில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் குல்பதின் நைப் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணியின் லிட்டோன் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

லிட்டோன் தாஸ் 16 ரன்களிலும், தமிம் இக்பால் 36  ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷாகிப் அல் ஹசனும், முஷ்பிகுர் ரஹிமும் அதிரடியாக ஆடி ஹசன் 51 ரன்களும், ரஹிம் 83 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டும், குல்பதின் நைப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் குல்பதின் நைப் 47 ஓட்டங்களும் ரஹ்மத் ஷா 24 ஓட்டங்களும் எடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 47 வது ஒவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 200 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை ஆப்கனிஸ்தான் அணி ஆடிய 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்து 0 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளது. மழையின் காரணமாக பல அணிகள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு ஒரு புள்ளிகளை பெற்றது. அந்த அதிஷ்டமும் அபிகானிஸ்தான் அணிக்கு கிடைக்காமல் போனது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#afganisthan vs bangaladesh #worldcup 2019
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story