அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்! காரணம் என்ன தெரியுமா?
ACB suspends Mohammad Shahzad for one year

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷேசாத் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஒரு வருடம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரரும் விக்கெட் கீப்பருமான முகமது ஷேசாத், அந்த நாட்டின் கிரிக்கெட் வாரிய நடத்தை விதிகளை மீறியதாக கடந்த சில தினங்களுக்கு முன் அவருடைய ஒப்பந்தம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் கிரிக்கெட் வாரிய ஒழுங்கு விதிகளை மீறியதற்காக 12 மாத காலத்திற்கு அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகமது ஷேசாத்2019 உலகக் கோப்பை போட்டிகளில் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.