#Breaking: 37 பந்துகளில் 100 ரன்கள்.. வெளுத்தது வாங்கிய அபிஷேக் சர்மா.. அதிரும் அரங்கம்.!
#Breaking: 37 பந்துகளில் 100 ரன்கள்.. வெளுத்தது வாங்கிய அபிஷேக் சர்மா.. அதிரும் அரங்கம்.!
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இந்தியா - இங்கிலாந்து 5 வது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா, இன்று ஆட்டத்தில் 100 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
18 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருந்தவர், 37 பந்துகளில் 100 ரன்களை கடந்து இருந்தார். இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாகிப்போயினர்.
இதையும் படிங்க: செஸ் வீராங்கனை வைஷாலிக்கு கைகொடுக்க மறுத்த உஸ்பெகிஸ்தான் வீரர்.. சர்ச்சையானதால் பரபரப்பு விளக்கம்.!
ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றிவிட்ட நிலையில், இறுதி ஆட்டத்தில் அபிஷேக் பலரின் கவனத்தை ஈர்த்தார். அம்பானி, அமிதாப் பச்சன், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், இன்போசிஸ் சத்தியமூர்த்தி உட்பட பலரும் போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.
அபிஷேக்-க்கு சச்சின் பாராட்டு