×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2020 ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்களின் முழு விவரம்.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!

13-வது ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

13-வது ஐ.பி.எல். சீசனின் இறுதி ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் நேற்று மோதியது. நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி 18.4 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து வெற்றிபெற்று 5-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது. 

நடப்பு சீசனில் பேட்டிங், பவுலிங் என சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்காக வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது. அவர் லீக் சுற்றில் மட்டும் 670 ரன்களை எடுத்துள்ளார். இதில் ஒரு சதம், 5 அரை சதம், 23 சிக்ஸர், 58 பவுண்டரி விளாசியுள்ளார். மேலும் கேம் சேஞ்சர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து பந்துவீச்சில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்காக வழங்கப்படும் ஊதா நிற தொப்பி ரபாடாவுக்கு வழங்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் மொத்தம் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான விருது அவருக்கு அளிக்கப்பட்டது.

வளர்ந்து வரும் வீரர் விருது தேவ்தத் படிக்கலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடியுள்ள தேவ்தத் 473 ரன்களை எடுத்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். அதேபோல் இந்த சீசனின் பவர் பிளே விருது, மும்பை இண்டியன்ஸ் அணியின் பல போட்டிகளின் வெற்றிக்கு காரணமாக இருந்த போல்டுக்கு வழங்கப்பட்டது.

இந்த சீசனில் மதிப்பு மிகுந்த வீரர்(Most Valuable Player) விருது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோப்ரா ஆர்ச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்த சீசனில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 கேட்சுகளை பிடித்துள்ளார். மேலும், 10 சிக்ஸர்களையும் அடித்துள்ளார்.

இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் மும்பை அணியின் இஷான் கிஷன். இவர் விளையாடிய 14 ஆட்டங்களில் 30 சிக்ஸர்களை அடித்து  516 ரன்களை இந்த சீசனில் கிஷன் எடுத்து அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருதை பெற்றுள்ளார். சூப்பர் ஸ்டிரைக்கர் விருது  மும்பை அணியின் பொல்லார்டுக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ipl #awards
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story