×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இது என்ன சிஎஸ்கே-வுக்கு வந்த சோதனை!! நேற்று தோல்வியோட மட்டும் போச்சுன்னு பாத்தா தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதமாமே!! என்ன காரணம் தெரியுமா?

நேற்றைய போட்டியில் சென்னை அணி பந்துவீச தாமதம் ஆனதால் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு 12 லட

Advertisement

நேற்றைய போட்டியில் சென்னை அணி பந்துவீச தாமதம் ஆனதால் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை - டெல்லி அணிகள் மோதிய நேற்றைய T20 போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்தது. இதன்மூலம் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி வீரர்கள் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய டெல்லி அணி வீரர்கள் 18.4 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 190 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. சென்னை அணி முதல் போட்டியிலையே தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நெற்றியை போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது மட்டுமில்லாமல் தாமதமாக பந்து வீசிய குற்றத்திற்காக அணியின் கேப்டன் தோனிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிப்படி 20 ஓவர்கள் கொண்ட ஒரு இன்னிங்ஸை 90 நிமிடங்களில் முடிக்கவேண்டும்.

ஆனால் சென்னை அணி 90 நிமிடங்களில் முடிக்க தவறியதால் அணியின் கேப்டனான தோனிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#csk #dhoni
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story